திருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி! - விடிய விடிய நடக்கும் சோதனைSponsoredதிருச்சி விமான நிலையத்தில் தங்கக் கட்டிகள், கடல் ஆமைகள், வெளிநாட்டுப் பொருள்கள் கடத்தல் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
 
 
திருச்சி விமான நிலையத்துக்கு கடந்த வாரம் மலேசியாவிலிருந்து வந்த தனியார் விமானத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான 6.5 கிலோ தங்கக் கட்டிகள் கடத்தப்படுவதாக  தகவல் வந்தது. இதையடுத்து சென்னை மத்தியப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்கள். தொடர்ந்து பலரிடம் இது தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், நேற்று மாலை சிங்கப்பூரிலிருந்து இலங்கை வழியாக வந்த பயணிகள் விமானத்தில் பொருள்கள் கடத்தப்படுவதாகத் தகவல் வந்தது. இதன் அடிப்படையில் சென்னையிலிருந்து சி.பி.ஐ., எஸ்.பி மைக்கேல்ராஜ் தலைமையிலான 2 டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் மதுசூதனன் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சி.பி.ஐ.அதிகாரிகள் மாலை 4 மணியளவில் திருச்சி விமான நிலையத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிய பயணிகள் உட்பட அனைவரையும் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
 
சுமார் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்த விமானத்தில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். ஒரு சில பயணிகளை வெளியே அனுப்பிவிட்டு, இறுதியாக எட்டு பெண்கள் உட்பட சுமார் 29 சந்தேகப்படும் பயணிகளைப் பிடித்து வைத்திருக்கும் சி.பி.ஐ அதிகாரிகள் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
 
இந்நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் 3 சுங்கத்துறை அதிகாரிகளை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணைக்கு வெளியில் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளதால் திருச்சி விமான நிலையம் பரபரப்பாக உள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored