கருணாநிதியைப் பார்க்க முதல்முறையாக மருத்துவமனை வந்த தயாளு அம்மாள்!Sponsoredதி.மு.க தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு தயாளு அம்மாள் வருகை தந்துள்ளார்.  

File Photo

Sponsoredதி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மு.க.ஸ்டாலின், கனிமொழி, அழகிரி உள்ளிட்டோர் மருத்துவமனையிலிருந்து பார்த்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். தி.மு.க தொண்டர்கள் மருத்துவமனை வாயிலில் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில், தற்போது கருணாநிதியைப் பார்க்க மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கோபாலபுரத்தில் இருந்த தயாளு அம்மாளை தமிழரசு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். கருணாநிதி பயன்படுத்தும் பிரத்யேக வாகனத்தில் அழைத்து வரப்பட்டார்.  கருணாநிதியைப் பார்ப்பதற்காக  மனைவி தயாளு அம்மாள் காவேரி மருத்துவமனைக்கு வருவது இதுவே முதல்முறை.

Sponsored
Trending Articles

Sponsored