3,100 ரூபாய்க்காக உயிரை மாய்த்த பட்டதாரி வாலிபர்! - போலீஸூக்குப் பயந்து ஆற்றில் குதித்தார்Sponsoredசென்னையில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய பட்டதாரி வாலிபர் போலீஸாரின் வாகனச் சோதனையில் சிக்கினார். அப்போது போலீஸூக்குப் பயந்து அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர் உயிரிழந்தார். 

சென்னை அடையாறு அருணாசலபுரத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். 22 வயதாகும் இவர், பி.காம் படித்துள்ளார். கடந்த சில நாளுக்கு முன்பு அந்தப் பகுதியில் நடந்த கோயில் திருவிழாவுக்குச் சென்றார். பிறகு தன்னுடைய நண்பரை அபிராமபுரத்தில் உள்ள அவரின் வீட்டில் விடுவதற்காக பைக்கில் சென்றார். இரவு 10 மணியளவில் அடையாறு மேம்பாலம் அருகே சென்றபோது அங்கு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

Sponsored


ராதாகிருஷ்ணனின் பைக்கை வழிமறித்த போலீஸார் அவரிடம் விசாரித்தனர். அப்போது ராதாகிருஷ்ணன், குடித்துவிட்டு பைக் ஓட்டியது தெரியவந்தது. இதனால் போலீஸார், அவரின் பைக்கை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரித்தபோது ஓட்டுநர் உரிமமும் இல்லை என்று தெரியவந்தது. இந்தச் சமயத்தில் பைக்கை பறிமுதல் செய்த போலீஸாரிடம், தன்னுடைய பைக்கை திரும்ப தர வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் அடம்பிடித்து தகராறு செய்தார். ஆனால், போலீஸார் பைக்கை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன், பைக்கை திரும்ப தரவில்லை என்றால் அடையாறு ஆற்றில் குதித்துவிடுவதாகப் போலீஸாரை மிரட்டினார். ஆனால், அதைப் போலீஸார் கண்டுக்கொள்ளவில்லை. 

Sponsored


 

இந்தநிலையில் ராதாகிருஷ்ணன் ஓடிச்சென்று அடையாறு மேம்பாலத்திலிருந்து ஆற்றில் குதித்துள்ளார். இதனால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். மயிலாப்பூர், கிண்டி ஆகிய இடங்களிலிருந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் இரவு 2 மணிவரை தேடினர். ஆனால், அவர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் இரண்டாவது நாளாக நேற்றும் தீயணைப்புப் படையினர் அடையாறு ஆற்றில் ரப்பர் படகில் தேடி வருகின்றனர். இந்த நிலையில் மூன்றாவது நாளாகத் தேடுதல் பணி நடந்தது. அடையாறு முகத்துவாரம் பகுதியில் ராதாகிருஷ்ணனின் உடல் மிதந்த தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று அவரின் சடலத்தைப் போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராதாகிருஷ்ணனுடன் வந்த அவரின் நண்பரிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதற்கு 2,500 ரூபாய் அபராதம், லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதற்கு 500 ரூபாய் அபராதம். ஹெல்மெட் அணியாததற்கு அபராதம் 100 ரூபாய் என மொத்தம் 3,100 ரூபாய் அபராதத்தை ராதாகிருஷ்ணன் செலுத்த வேண்டியதிருக்கும். ஆனால், அவர் அவசரப்பட்டுவிட்டார்" என்றனர். 

போலீஸாரின் நடவடிக்கையால் வாலிபர் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 Trending Articles

Sponsored