டாஸ்மாக்கை திறக்க ஒன்றுசேர்ந்த அனைத்துக்கட்சியினர்... கொந்தளித்த கருமத்தம்பட்டி பெண்கள்Sponsoredகோவை கருமத்தம்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி சார்பில், மாவட்ட  ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

மக்கள் போராட்டத்தாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாலும், டாஸ்மாக் இல்லாத டவுன் என்ற பெருமையைப் பெற்றிருந்தது, கோவை கருமத்தம்பட்டி பேரூராட்சி. அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் செய்தும் அங்கு ஓராண்டாக டாஸ்மாக் அமைக்க முடியவில்லை. இதையடுத்து, அந்தப் பகுதியில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்து வருகின்றனர். ஆளுங்கட்சி மற்றும் போலீஸாரின் ஆதரவுடன் இது தொடர்ந்து வருகிறது.

Sponsored


இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணியூர் அருகே ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு டாஸ்மாக் அமைத்தனர். இதைத்தொடர்ந்து, ஊரின் மையப் பகுதியில் டாஸ்மாக் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இது ஒருபுறமிருக்க, கருமத்தம்பட்டியில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்துள்ளது. அ.தி.மு.க, தி.மு.க, கம்யூனிஸ்ட், பா.ஜ.க, தே.மு.தி.க உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில், கள்ளச் சந்தையில் மதுவிற்பதைத் தடுக்க, சோமனூர் மற்றும் கருமத்தம்பட்டியில் டாஸ்மாக் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டுள்ளது.

Sponsored


இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து, டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்று, கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இன்று மனு அளித்துள்ளனர். சோமனூரில் அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பகுதி பெண்கள் டாஸ்மாக் கடை அமைய உள்ள கட்டடம் முன்பு, காந்திப் படத்துடன் அறவழியில் போராடி வருகின்றனர்.Trending Articles

Sponsored