தமிழகத்தில் நாளை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்! பேருந்துகள் ஓடுமா?மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.  ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கப்படுமா என்று தெரியவில்லை. 

Sponsored


மத்திய அரசு, மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர உள்ளது. பெருமளவில் பாதிப்புகள் ஏற்படும் இந்தச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கோரி, நாடு முழுவதும் மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்துள்ளனர்.

அதன்படி, நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை  ஆட்டோக்கள், கால் டாக்சிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, தொ.மு.ச, பாட்டாளி தொழிற்சங்கம், விடுதலைச் சிறுத்தைகள், தே.மு.தி.க உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஈடுபடுகின்றன. இதனால் அரசுப் பேருந்து இயக்கப்படுமா என்று தெரியவில்லை. தமிழகம் முழுவதும் 3 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 1 லட்சத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாளை சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் தொழிற்சங்கங்கள் முடிவுசெய்துள்ளன.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored