`யார் யாரோ வந்து மிரட்டுகிறார்கள்!’ - கலங்கும் சத்துணவு ஊழியர் பாப்பாள் கணவர்Sponsored`தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்துகொண்டே இருப்பதால் அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார் திருமலைக் கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளி சத்துணவு ஊழியர் பாப்பாளின் கணவர் பழனிச்சாமி.

திருப்பூர் மாவட்டம் திருமலைக்கவுண்டம் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியின் சத்துணவு சமையலர் பாப்பாளை, சாதிப் பெயரைச் சொல்லி தரக்குறைவாகத் திட்டியதோடு, அவரைப் பணி செய்யவிடாமல் தடுத்த வேற்று சாதியினரின் செயல் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பாப்பாள் அளித்த புகாரின் அடிப்படையில், 87 பேர் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை. இந்தச் சம்பவத்தில் தற்போதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 'தொடர்ந்து மிரட்டல்கள் வந்துகொண்டு இருப்பதால், எங்களின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார் பாப்பாளின் கணவர் பழனிச்சாமி. இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு கலெக்டரிடம் இதுதொடர்பாக மனு அளித்திருக்கிறார். 

Sponsored


பழனிசாமியிடம் பேசினோம். ``என் குடும்பத்துக்கும் எங்களது வீட்டைச் சுற்றியுள்ள உறவினர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. அடையாளம் தெரியாத ஆள்களால் எங்களுக்குத் தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எனவே அரசு நிர்வாகம் உரிய முறையில் எங்களுக்குப் பாதுகாப்பை வழங்க வேண்டும்" என்றார். 

Sponsored
Trending Articles

Sponsored