`வீட்டுல காசு இல்ல; டாக்டர்கிட்ட போக முடியல'- அரசு உதவிக்காகக் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிப் பெண்Sponsored``எங்க வீட்டுல காசு இல்லாததால் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போக முடியல. அரசாங்கம் எனக்கு உதவித்தொகை கொடுக்க வேண்டும்'' என்று கண்ணீர் மல்கக் கூறினார், மாற்றுத்திறனாளிப் பெண் லதா.

சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு, வளர்ச்சி குன்றிய சுமார் 3 அடி உயரம் உடைய ஒரு பெண், முகம் வீங்கிய நிலையில் வந்திருந்தார். அவருடைய தோற்றம், குழந்தையை போல இருந்ததால், அனைவரின் கவனமும் அந்தப் பெண்ணின் மீதே இருந்தது. அந்தப் பெண் யாரிடமும் பேசாமல் அமைதியாக அவருடைய அப்பா பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்தார். அவரின் அப்பாவிடம் பேசினோம், ''என் பேரு முருகன், என் மனைவி பேரு விஜயா. எங்களுக்கு மேகநாதன், லதா, சித்ரா, மணிவண்ணன் என்ற பிள்ளைகள் உள்ளனர். நாங்க சேலம் மாவட்டம், வலசையூர் அருகே தெலுங்கானூரில் வசிக்கிறோம். அனைத்து குழந்தைகளைப் போல லதாவும் பிறந்தது. ஆனால், குழந்தை வளரவே இல்லை. டாக்டர்கிட்ட காட்டியபோது எந்தக் குறையும் இல்லை; வளர்ச்சி மட்டும் இல்லன்னு சொல்லிட்டாங்க. இப்ப இந்தப் பொண்ணுக்கு 23 வயசு முடியப்போகுது. காலையில் ஒரு இட்லி, இரவு ஒரு இட்லிதான் சாப்பிடுது. எந்த வேலையும் செய்யாது. வீட்டோட சரி. கொஞ்ச தூரம்கூட நடக்க முடியலை. அடிக்கடி முகம் வீங்கிக்குது. டாக்டரிடம் கேட்டால், சத்து குறைபாட்டால் வருது. ஆரோக்கியமா சாப்பிட்டா நல்லாப் போயிடும்னு சொல்றாங்க.

Sponsored


நானும் என் மனைவியும் கூலி வேலைக்குப் போய் குடும்பம் நடத்திட்டு இருக்கிறோம். என் பொண்ணுக்கு மாற்றுத்திறனாளி உதவித் தொகை கொடுத்தால், மருத்துவச் செலவுக்கு உதவும் என்பதால், உதவி கேட்டு கலெக்டரைப் பார்க்க வந்தோம். அவர் மாற்றுத்திறனாளி துறை அதிகாரிக்கு போன் பண்ணி அவரைப் போய் பார்க்கச் சொன்னார். மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரியைப் போய் பார்த்தேன். நாளைக்கு மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை தருவதாகச் சொன்னாங்க'' என்றார்.

லதாவிடம் பேசியபோது, ''ஒரு இட்லிக்கு மேல சாப்பிட முடியல. வயிறு வலிக்குது. அடிக்கடி முகம் வீங்கி, கண் தெரியாமப்போயிருது. கால், கை மூட்டு மூட்டா வலிக்குது. எங்க வீட்டுல காசு இல்லாததால் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போக முடியல. அரசாங்கம் எனக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை கொடுக்கணும்'' என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored