மெரினாவில் நினைவிடம் அமைக்க தடைக் கோரிய மனு வாபஸ்! - வழக்கு தள்ளுபடிSponsoredமெரினாவில் நினைவிடம் அமைக்கக் கூடாது என்ற வழக்கை மனுதாரர் வாபஸ் பெற்றதனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மெரினா கடற்கரையில் இனி யாருக்கும் நினைவிடம் அமைக்கக்கூடாது எனக் கடந்த வாரம் வழக்கறிஞர் காந்திமதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த இந்த மனுவை அவர் விசாரணைக்கு எடுக்காததால் ஒத்திவைக்கப்பட்டது. இன்று பொறுப்பு நீதிபதி குலுவாடி ரமேஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரிக்கும் முன்பாக முறையீட்டு நேரத்திலேயே மனுதாரர் காந்திமதி இந்த வழக்கை வாபஸ் பெறுவதாகவும் அதற்கு நீதிமன்றம் அனுமதி தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அவரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

Sponsored


காந்திமதியின் மனுவில், ‘உலகின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான மெரினா மிகவும் அழகானது. இதற்கு முன்னதாக முதல்வராக இருந்து இறந்த எம்.ஜி.ஆர். அண்ணாதுரை, ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் உள்ளன. இதனால் இதைக் காணவரும் பொதுமக்கள் மற்றும் அவர்கள் எழுப்பும் ஒலிகளினால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. எனவே, முன்னதாக உள்ள நினைவிடங்களை அகற்ற முடியாது இதனால் இனி புதிய நினைவிடங்கள் அமைக்காத வண்ணம் சென்னை மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored
Trending Articles

Sponsored