`எழுந்து வா தலைவா’... மாம்பழத்தில் கருணாநிதியின் உருவம்!Sponsoredகருணாநிதி உடல்நலம் குணமடைவதற்காக, அவரது உருவத்தை மாம்பழத்தில் தத்ரூபமாக வரைந்துள்ளார் கோவையைச் சேர்ந்த ஓவியர் யு.எம்.டி.ராஜா.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் யு.எம்.டி.ராஜா. தனியார் நிறுவனத்தில் தங்க நகை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்துவரும் இவருக்கு, மைக்ரோ அளவில் ஓவியம் வரைவதில் ஆர்வம் மிகுந்தவர். இந்த நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நலம் சீரடைந்து திரும்புவதற்காக, மாம்பழத்தில் கருணாநிதியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்திருக்கிறார் யு.எம்.டி.ராஜா. 

இதுகுறித்து யு.எம்.டி.ராஜா கூறுகையில், ``சிறு வயது முதலே கருணாநிதி மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறேன். எனக்கும் என் மகளுக்கும் (காவியத் தமிழ், அபிநய தமிழ்) கருணாநிதிதான் பெயர் வைத்தார். அவரின் உடல்நிலை கவலைக்கிடம் என்பதை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது மிகுந்த மனவேதனையடைந்தேன். ஒரு கலைஞனாக, அவரை மனதில் நிறுத்தும் வகையில் பழுத்த மாம்பழத்தில் அவரது உருவப்படத்தை வரைந்தேன். அவர் அரசியல் ஞானி என்பதால், பழுத்த மாம்பழத்தில் வரைந்துள்ளேன். வாட்டர் கலர் மற்றும் ஆயில் பெயின்ட் கொண்டு மூன்று மணிநேரம் வரைந்தேன். அவர் உடல்நலம் பூரண குணமடைந்து, மீண்டு வர வேண்டும். 'என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே' என்ற அவரின் குரலைக் கேட்க வேண்டும். தமிழக மக்களுக்கு, அவர் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும்" என்றார். மேலும், மாம்பழத்தின் அருகிலேயே இலையில் 'வா தலைவா... எழுந்து வா' என கருணாநிதியை வாஞ்சையோடு அழைக்கும் விதமாக தனது ஓவியத்தில் குறிப்பிட்டுள்ளார் ராஜா.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored