`1957ல் கலைஞர் குளித்தலையில் ஜெயிச்சதுக்குக் காரணம் இதுதான் தம்பி!’ - நெகிழும் தி.மு.க-வின் மூத்த தொண்டர்Sponsored உதயசூரியன் என்ற அண்ணா கொடுத்த ஒளியைப் பிரகாசிக்கவைத்த கலைஞர் என்னும் சூரியன் அணைந்துவிட்டது. தமிழகமே துக்கம் அனுசரித்து வருகிறது. தொடர்ந்து 13 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தோல்வியே காணாத தலைவராகத் தனது இருப்பை வரலாற்றுச் சுவடுகளில் விட்டுட்டுப் போயிருக்கிறார். அவரை முதன்முறையாக சட்டமன்றத்துக்கு 1957ல் ஜெயிக்கவைத்து அனுப்பிய குளித்தலை தொகுதி மக்கள் இதயம் நொறுங்கிக்கிடக்கிறார்கள்.  

குளித்தலை தொகுதியில் வரும் கள்ளப்பள்ளியைச் சேர்ந்த தி.மு.க-வின் தீவிர விசுவாசியான அரங்கசாமி என்ற தாத்தா,
"நான் தி.மு.க வெறியன் தம்பி. தி.மு.க கட்சிக்காகவே சொத்தை எல்லாம் அழிச்சவன். ஆனா,கலைஞர் என்ற ஒரு மனிதருக்காகத்தான் அத்தனையும் செய்தேன். அண்ணா இறந்தப்ப,என் சார்பில் 7 லாரிகளில் ஆட்களை சென்னைக்கு அழைச்சுட்டுப்போனேன். கலைஞர் முதன்முதலில் 1957ல் இந்தத் தொகுதியில் நின்னப்ப, நான் ஒன்றிய அவைத்தலைவரா இருந்தேன். தொடர்ந்து 15 வருடங்கள் இருந்தேன். இதைத் தவிர, 20 வருடங்கள் கிளைச் செயலாளராகவும் இருந்தேன்.

Sponsored


அண்ணா மறைவுக்கு முன்னாடி, அவரது பிறந்தநாளை தமிழகத்திலேயே யாரும் பண்ணாத அளவுக்கு பிரமாண்டமாகக் கொண்டாடுவேன். கலைஞர் இந்தத் தொகுதியில நின்னப்ப, லாலாபேட்டையில் பிரமாண்டமாக பிரசாரக் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்தேன். அதைப் பார்த்துட்டு, 'தி.மு.க-வின் தூண்'னு கலைஞர் சொன்னார். அவரை வீடுவீடாக அழைச்சுட்டுப் போய் அமர வச்சு, 'கலைஞருக்குதான் ஓட்டு போடணும்'னு சொன்னேன். அவரும் சாதி பாகுபாடு பார்க்காமல் எல்லோர் வீடுகளிலும் அமர்ந்து சாப்பிடுவார்; தண்ணீர், டீ வாங்கிக் குடிப்பார். தொகுதி மக்கள் அனைவரையும் உண்மையில் உடன்பிறப்பா பாவிச்சு நடந்துக்கிட்டார். குளித்தலை தொகுதியில உள்ள ஒவ்வொரு குடும்பத்துலயும் தனது பேச்சால்,செயலால் ஒருவராக மாறினார். அதனால்தான், எங்கோ திருவாரூர்ல இருந்து வந்து, குளித்தலையில் அவரால் 1957ல் எட்டாயிரத்து சொச்சம் ஓட்டுகளில் ஜெயிக்க முடிந்தது. இந்தத் தொகுதி மக்களும் அவர் ஜெயிச்சதும், 'இனி உங்களுக்கு வெற்றிதான்'னு வாழ்த்தி அனுப்பினாங்க. அதுபோலவே, அவரை யாராலயும் தோற்கடிக்கமுடியலை.

Sponsored


'தன்னை முதலில் சட்டமன்றத்துக்கு அனுப்பிய தொகுதி'ன்னு எப்போதும் குளித்தலை தொகுதிமீது அவருக்கு தனிப் பாசம். இந்த வழியா போனா, குளித்தலையில் இறங்கி மக்களிடம் பேசிட்டுதான் போவார். குளித்தலைக்கு வந்தா முத்துகிருஷ்ணன், இளமுருகு பொற்செல்விங்கிற இரண்டு பேர்களின் வீடுகளில்தான் தங்குவார். அயிரை மீன் குழம்பு வைக்கச்சொல்லி விரும்பிச் சாப்பிடுவார். குளித்தலை வாழையும், லாலாபேட்டை வெற்றிலையும் அவருக்கு பிடிக்கும். பத்து நாளைக்கு முன்னாடி அவருக்கு உடம்புக்கு முடியாம சென்னையில மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறதா கேள்விப்பட்டதும் துடிச்சுப் போயிட்டேன். அவரைப் போய் ஒரு எட்டு பார்க்கலாம்னு பாவி மனசு கிடந்து தவிச்சுச்சு. ஆனா, வீட்டுல என்னை யாரும் அழைச்சுட்டுப் போகலை. என்னால ஊன்றுகோல் இல்லாம பத்தடி தூரம்கூட நடக்க முடியாது. அவரை அவ்வளவு தூரம் தனியா போய் எப்படிப் பார்க்கிறதுனு புரியாமக்கிடந்தேன். ஆனாலும், எப்படியாவது அவரைப் போய் கடைசியா ஒருதடவை பார்த்துடணும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, நெஞ்சுல நெருப்பள்ளிக் கொட்டிட்டு இப்படி போயிட்டாரே. 'என் உயிரினினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே'ன்னு சுண்டி இழுக்கும் வாக்கியத்தை எங்கே போய் கேட்பேன்?!" என்றபோதே, அவரது கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்.Trending Articles

Sponsored