கருணாநிதிக்கு மெரினாவில் இடம்... வெளிச்சத்துக்கு வந்த கடற்கரை மண்டல பஞ்சாயத்துகள்!Sponsoredமெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதியின் நல்லடக்கத்துக்கு இடம் ஒதுக்கப்படுவது தொடர்பாக, சட்டரீதியான போராட்டத்தைத் தொடர்ந்துள்ளது தி.மு.க. 


தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல், தற்போது கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணியளவில் பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட இருக்கிறது.  அதன்பிறகு, ‘அவரது உடல் அண்ணா சமாதியில் அடக்கம் செய்யப்படுமா?’ என்பது இன்னும் உறுதியாகவில்லை. இதுதொடர்பாக மாநில அரசு எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க மாநில கலை, இலக்கிய, பகுத்தறிவு அணி செயலாளர் பொள்ளாச்சி உமாபதியிடம் பேசினோம். 

Sponsored


“ஜெயலலிதாவை அடக்கம்செய்தது தொடர்பாக அவர்கள் வழக்கை சந்தித்துக்கொண்டுவருகிறார்கள். இதை சட்டரீதியான விஷயமாக முன்வைக்கிறார்கள். இது ஒருபுறம் இருந்தாலும், அண்ணாவுக்கு அருகில் இடம் கொடுப்பதற்கு அவர்களுக்கு மனதில்லை. ராகுல் காந்தி முதல் மம்தா பானர்ஜி வரை அனைவருமே, இடம் வழங்க வேண்டும் எனக் கூறிவிட்டார்கள். எல்லா இடஒதுக்கீடுகளுக்கும் காரணமாக இருந்தவர் கருணாநிதி. அவருக்கான இடஒதுக்கீட்டுக்காக இப்போது உயிர் பிரிந்த பின்னரும் போராடிக்கொண்டிருக்கிறார். சமாதிக்கு இடம் அளிக்க மறுப்பதன் பின்னணியில் பா.ஜ.க இருக்கிறது. ‘என்னிடம் வந்து இடம் கேளுங்கள்’ என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. இயல்பாகவே, எடப்பாடியோ பன்னீர்செல்வமோ முடிவெடுப்பதாக இருந்திருந்தால் இடம் கொடுத்திருப்பார்கள். செயல் தலைவர் கேட்டபோதுகூட, இல்லையென்று எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை. அவருக்கு மேல் உள்ளவர்கள் இதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை!” என்கிறார். 

Sponsored


இதே விவகாரம் தொடர்பாக தி.மு.க தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் கடலூர் புகழேந்தியிடம் பேசினோம். “சமாதிக்கு இடம் ஒதுக்காமல் இருப்பதற்கு நியாயபூர்வமான காரணங்கள் எதுவும் இல்லை. சட்டபூர்வமான சிக்கல்களும் இல்லை. உயர் நீதிமன்றமும் இந்த விவகாரத்தைக் கிளீயர் செய்துவிட்டது. இவர்கள் காழ்ப்பு உணர்வைக் காட்டுகின்றனர். அல்லது அரசியல் காய் நகர்த்தல்களுக்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள். கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கக் கூடாது என்பதில் அ.தி.மு.க மட்டும் பிடிவாதமாக இருக்கவில்லை. பின்னணில் பா.ஜ.க-வின் பங்கும்  இருக்கிறது!” என்றார். 
இடஒதுக்கீட்டுக்காகப் போராடி வென்ற, கருணாநிதியின் சமாதி இடத்துக்கான போராட்டம் தொடர்கிறது!Trending Articles

Sponsored