`இதுகூட தமிழக தலைமைச்செயலாளருக்குத் தெரியாதா?' - கேள்வியெழுப்பும் வழக்கறிஞர் துரைசாமிSponsored'சென்னை உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தொடுத்த வழக்கைக் காரணம் காட்டி கருணாநிதிக்கு இடமளிக்க மறுத்தால், வழக்கை வாபஸ் பெறுகிறோம்' என வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

'தி.மு.க தலைவர் கருணாந்தியின் உடலை மெரினாவில் அடக்கம்செய்ய இடம் ஒதுக்க முடியாது' என்று தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து, தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடங்கி நடைபெற்றுவருகிறது. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் துரைசாமி, `வழக்கு நிலுவையில் உள்ளதாகக் காரணம் காட்டி கருணாநிதிக்கு இடமளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை அடக்கம்செய்த இடத்தில்தான் பிரச்னை உள்ளது.

Sponsored


Sponsored


அவரை அடக்கம் செய்த இடத்தில்தான் கடற்கரை மண்டலப்பகுதி வருகிறது. இதனால்,  அங்கு எந்தவித கட்டடமும் கட்டக் கூடாது. அதை அடக்கஸ்தலமாக மாற்றக் கூடாது எனக் கூறிதான் வழக்கு தொடர்ந்துள்ளோம். ஆனால் தமிழக அரசோ, அது கோஸ்டல் சோன் 2ல்தான் வருகிறது என்று சொல்கிறார்கள். உண்மையில், அது கோஸ்டல் சோன் 1ல் வருகிறது. அங்கு கட்டடம் கட்ட அனுமதி அளிப்பது சட்ட விரோதம். அதனால்தான் வழக்கு தொடர்ந்துள்ளோம்.அண்ணா சமாதி, கடற்கரை மண்டலப் பகுதியின் கீழ் வரவில்லை. அது கூவம் நதிக்கரை இடம். அந்த இடத்துக்கும், நான் தொடர்ந்த வழக்குக்கும் சம்பந்தமே இல்லை. அண்ணாவின் சமாதிக்கு அருகே உள்ளது கோஸ்டல் சோனில் வராது என்பதுகூட தலைமைச் செயலாளருக்குத் தெரியவில்லை.இந்தக் காரணத்தைக் காட்டி, இடம் மறுத்துள்ளார் தமிழக தலைமைச் செயலாளர். நாங்கள் தாக்கல்செய்த வழக்குதானே பிரச்னையாக உள்ளது? அதை வாபஸ் வாங்குகிறேன். கருணாநிதி உடல் மெரினாவில்தான் அடக்கம் செய்யப்படும்' என அவர் தெரிவித்தார்.
 Trending Articles

Sponsored