கருணாநிதி மறைவு - தேசிய அளவில் இன்று துக்கம் அனுசரிப்புSponsoredதி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று மாலை உயிரிழந்ததையடுத்து, தேசிய அளவில் இன்று துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திடீர் ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 28-ம் தேதி  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் தி.மு.க தலைவர் கருணாநிதி.  அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில், நேற்று மாலை அவர் காலமானார். இதையடுத்து இன்று அரசு விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்தது. கருணாநிதியின் மறைவையொட்டி, இன்று தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவிந்திருந்தது. இதன்காரணமாக அனைத்து மாநிலங்களின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

Sponsored


மாநிலத்தின் தலைநகரான டெல்லியில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட உள்ளது.  மேலும், மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி சார்பில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநில அரசு தரப்பிலும் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 2 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored