கோபாலபுரம் வீட்டை அறக்கட்டளைக்கு வழங்கியுள்ள கருணாநிதி! #KarunanidhiSponsoredகருணாநிதி தன் கோபாலபுரம் இல்லத்தைக் கடந்த 2010-ம் ஆண்டு அறக்கட்டளைக்குப் பரிசாக வழங்கியுள்ளார். 

தி.மு.க தலைவரும், இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவருமான கருணாநிதி நேற்று மாலை 6:10 மணியளவில் உயிரிழந்தார். சிறுநீர் தொற்று போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு கடந்த 11 நாள்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Sponsored


தற்போது அவரின் உடல் ராணுவ மரியாதையுடன் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்கள், பல்வேறு பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Sponsored


இந்நிலையில், கருணாநிதி குறித்த சுவாரஸ்யமான பல தகவல்கள் தற்போது சமூகவலைதலங்களில் வெளியாகி வருகின்றன. அதில் ஒன்றாக, கோபாலபுரத்துக்குப் பெயர் போன கருணாநிதி வாழ்ந்த தன் சொந்த வீட்டை அறக்கட்டளைக்குத் தானமாக வழங்கியுள்ளார் அவர். 

கருணாநிதி 1955-ம் ஆண்டு தான் அரசியலுக்கு வந்த காலத்தில் கோபாலபுரத்தில் ஒரு வீட்டை வாங்கியுள்ளார். பிறகு 1968-ம் ஆண்டு அந்த வீட்டை தன் மகன்களான அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோரின் பெயர்களில் பதிவு செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு கருணாநிதியின் 86-வது பிறந்தநாளின்போது கோபாலபுரம் வீட்டை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு தானமாக வழங்கியுள்ளார். கருணாநிதி மற்றும் அவரின் மனைவியின் வாழ்நாளுக்குப் பிறகு இந்த வீட்டை ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மருத்துவமனையாக மாற்றியமைக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

கருணாநிதியின் தாய் அஞ்சுகம் அம்மாளின் பெயரில் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் அறங்காவலர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.Trending Articles

Sponsored