`எனக்கு முன் என் நண்பன் இறந்துவிட்டான்'- கருணாநிதியின் பள்ளித்தோழர் உருக்கம்Sponsored``அண்ணாவின் தம்பியான கலைஞரை அவரது அருகிலேயேதான் அடக்கம் செய்ய வேண்டும்.  இதுவே எனது இறுதி ஆசை. எனக்கு முன் என் நண்பன் இறந்துவிட்டான்" என்று கருணாநிதியின் பள்ளித்தோழர் ராமதாஸ் உருக்கமாக கூறினார்.

தி.மு.க தலைவர் கருணாநிதியுடன் திருவாரூர் போர்டு ஹை ஸ்கூலில் ஒன்றாகப் படித்தவர் எண்கண் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ். தற்போது நலமுடன் உள்ளார்.  அவர் தனது இரண்டாவது மகள் சகிலாவுடன் திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் அருகே மூலங்குடி கிராமத்தில் வசித்து வருகிறார்.  நேற்று மாலை கருணாநிதியின் இறப்புச் செய்தியைக் குடும்பத்தினர் உடனடியாக அவரிடம் சொல்லவில்லை.  8 மணிக்கு மேல்தான் படிப்படியாக சொல்லியிருக்கிறார்கள்.  

இதுபற்றி ராமதாஸின் பேத்தி ரம்யாவிடம் பேசியபோது, ``தமிழுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் நண்பன் செய்த உதவிபோல் வேறுயாரும் செய்ததில்லை. அவருக்கு முன் நான் போயிருக்கணும். எனக்கு முன் அவர் போய்விட்டாரே என்னால தாங்க முடியல என்று சொல்லி டி.வி. முன் அமர்ந்த தாத்தா இதுவரை நகரவில்லை. அழுதுகொண்டே இருக்கிறார்.  நானும் என் அம்மா சகிலாவும் எவ்வளவோ சொல்லி தேற்றியும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.  நேற்று இரவு முதல் இதுவரை அவர் சாப்பிடவில்லை. தண்ணீர்கூட அருந்தவில்லை.   அழுதபடியே இருக்கிறார்.  ஏன் தாத்தா இப்படி இருக்கீங்க என்று கேட்டதற்கு, தமிழ்நாட்டுக்கு அவர் செய்த நன்மைகளை வேறு யார் செய்யமுடியும்?

5 முறை முதலமைச்சராக இருந்தவருக்கு மெரினாவில் இடம் கொடுக்கக்கூடாதா? மெரினா கடற்கரையை அழகுப்படுத்தியவரே அவர்தானே? அவருக்கு அங்கு இடம் கொடுக்க வேண்டும். அண்ணாவின் தம்பியான கலைஞரை அவரது அருகிலேயேதான் அடக்கம் செய்ய வேண்டும். இதுவே எனது இறுதி ஆசை. எனக்கு முன் என் நண்பன் இறந்துவிட்டான்.  அவருக்காக இந்த அரசை நான் வேண்டுகிறேன். மெரினாவில் இடம் கொடுப்பார்களா? என்று கேட்டபடியே தாத்தா அழுதுகொண்டிருக்கிறார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored