கருமத்தம்பட்டியில் டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடியவர்கள் மீது தாக்குதல் - ஒருவர் காயம்!Sponsoredகோவை, கருமத்தம்பட்டியில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார்.

கோவை, கருமத்தம்பட்டி பேரூராட்சியில், மக்கள் போராட்டத்தின் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் இல்லாமல் இருந்தன. டாஸ்மாக் கடைக்கு பலத்த எதிர்ப்புகள் இருந்ததால், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் மற்றும் போலீஸார் உதவியுடன் கருமத்தம்பட்டியில் சட்டவிரோத மதுவிற்பனை நடந்து வந்தது. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தட்டாங்குட்டை பகுதியில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. அது ஊருக்கு ஒதுக்குப்புறம் என்பதால், மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்தநிலையில், ஊரின் மையப் பகுதியில் மூன்று டாஸ்மாக் கடைகளைத் திறக்க திட்டமிடப்பட்டள்ளது. இதையொட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், டாஸ்மாக் கடை திறக்க வலியுறுத்தி தீர்மானம் போடப்பட்டது. மேலும், டாஸ்மாக் கடை திறக்க வலியுறுத்தி, அனைத்துக் கட்சிகள் சார்பில் கோவை கலெக்டரிடம் மனுவும் அளிக்கப்பட்டது.

Sponsored


இது அந்தப் பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தவே, சோமனூரில் புதிதாக அமையவுள்ள டாஸ்மாக் கடை முன்பு அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை குடிபோதையில், 10-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் வந்த சில மர்ம நபர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தகராறு செய்ய வந்ததாக கூறப்படுகிறது.

Sponsored


ஆளுங்கட்சிப் பிரமுகரான ஏ.சி.மகாலிங்கம்தான், பணம் மற்றும் மது கொடுத்து ஆட்களைக் கூட்டியதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பதற்றம் நீடித்த நிலையில், இரு தரப்பினரையும் போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலரை, மர்ம நபர்கள் சிலர் கல்வீசித் தாக்கியுள்ளனர். இதில் ராஜாம்மாள் என்பவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கும், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள்தான் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கருமத்தம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Trending Articles

Sponsored