தனது கல்லறையில் கருணாநிதி எழுதச் சொன்ன வாக்கியம்! #MissUKarunanidhiSponsoredதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருவமான மு.கருணாநிதி மாலை சென்னைக் காவேரி மருத்துவமனையில் வயது மூப்பின் காரணமாகக் காலமானார். திமுக தொண்டர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் கருணாநிதி பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்த வண்ணமிருக்கின்றனர். 

மு.கருணாநிதியின் சிறப்புகளுள் அவரின் நினைவாற்றலையும் உடலைப் பேணியதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஏனெனில், பல்வேறு நேரங்களில் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பழைய வரலாற்றுச் சம்பவங்களோடு கோத்து பதில் அளிப்பதில் அவருக்கு நிகர் அவரே! நெஞ்சுக்கு நீதி எனும் தன் வரலாற்று நூலில் அவர் எழுதியிருப்பவை, அவரின் வாழ்க்கையைத் தெரிவிப்பது மட்டுமன்றி தமிழ்நாட்டின் அரைநூற்றாண்டைப் புரிந்துகொள்ளவும் உதவும் ஆவணம். 

Sponsored


தமிழகத்தின் கடைமடைப்பகுதியில் இருக்கும் திருக்குவளை எனும் சிறு கிராமத்தில் பிறந்து, 12 வயதில் மாணவ நேசன் எனும் பத்திரிகையை நடத்தினார். பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, அண்ணாவின் பேச்சால் கவரப்பட்டு அரசியல் நோக்கிப் பயணித்தவர். திரைப்பட வசனங்களால் மக்களின் மனத்தில் புதிய சிந்தனைகளை விதைத்தவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படமான `பராசக்தி; கருணாநிதியின் எழுத்தோவியத்தில்தான் உருவானது. பெரியாரின் கருத்துகளைத் தமிழகம் முழுவதும் பரப்பியவர். பெரியாரோடு அண்ணா முரண்பட்டு வெளியேறினார். அப்போது அண்ணாவின் உற்ற துணையாக நின்று திராவிட முன்னேற்ற கழகம் உருவானதில் முதன்மையான பங்கு வகித்தார். அண்ணா ஆட்சி அமைக்கும்வரை தோளோடு தோளாகத் துணை நின்றவர். 1957 ம் ஆண்டு குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வாகை சூடினார். அப்போது தொடங்கி 13 வது முறையாகத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் வெற்றிகளைக் குவித்தார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, திமுகவைத் தலைமையேற்று சமூக நீதி தடத்தில் பயணிக்க வைத்தார். இந்திரா காந்தி எமர்ஜென்ஸியை அமல் படுத்தியபோது, இந்தியாவின் முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்திலிருந்து வந்ததுதான் அது கருணாநிதியுடையது. 

Sponsored


இந்தியை எதிர்த்து, கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம் கருணாநிதியின் அரசியல் அடையாளங்களில் ஒன்று. மாநில சுயாட்சியை விட்டுக்கொடுக்காது மத்திய கூட்டாட்சியை வலியுறுத்தியதில் திறம்படச் செயல்பட்டவர் அவர். கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதி என்றாலும் மக்களின் சமய உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர். ஐந்து முறை தமிழ்நாட்டு முதல்வராகப் பதவி வகித்ததில் எண்ணற்ற சாதனைகளைச் செய்தவர். குறிப்பாக, பெண்களுக்குச் சொத்தில் பங்கு, திருநங்கை வாரியம், செம்மொழி அந்தஸ்து எனப் பலரின் கவனத்திலும் வராத விஷயங்களை ஆராய்ந்து அதற்கு தீர்ப்பளித்தவர். அரவாணிகளை திருநங்கை என்றும், உடல் ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளி என்றும் அழைக்கப்படுவதற்கு இவரே காரணம். 

பரபரப்பான அரசியல் பயணம் நீடிக்க, தம் உடலைப் பாதுகாக்க வேண்டும் எனும் புரிதல் கொண்டவர். அதனால், விடியற்காலையில் எழுந்திருந்து யோகப் பயிற்சி, நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என ஓர் ஒழுங்கைக் கடைப்பிடித்தவர். வாழ்வின் இறுதி சில நாள் முன்வரை சுகர், ரத்த அழுத்தம் போன்றவை அவரை அண்டவே இல்லை. அவரின் வயதின் மூப்பின் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வில் இருக்க வேண்டியதாயிற்று. கடந்த இரு வாரங்களுக்கு முன் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நல்ல நிலையில் உடல்நிலைத் தேறிவந்த நிலையில், வயதின் மூப்பு காரணமாக நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். 

எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணித்து, அதற்கேற்ற திட்டங்களை வகுத்த கருணாநிதி, தான் இறந்த பிறகு தன்னுடைய கல்லறையில் என்ன எழுத வேண்டும் என்பதையும் முன்பே அறிவித்திருக்கிறார். அது ''ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வுகொண்டிருக்கிறான்'.  Trending Articles

Sponsored