அன்றே சொன்னார் கருணாநிதி... நிரூபித்துக் காட்டிய வழக்கறிஞர் வில்சன்!Sponsoredசென்னை மெரினாவில் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய தி.மு.க சார்பில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகிய மூத்த தி.மு.க வழக்கறிஞர் வில்சன், வெற்றியும் பெற்றுவிட்டார். 

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரினா, அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்குவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இதனால், தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவசர வழக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு தி.மு.க. சார்பிலும் அரசுத் தரப்பிலும் கடும் வாதம் நடந்தது.

தி.மு.க. சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகினார். அவர், ``மெரினாவில் அண்ணா சமாதி அருகே கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும். இடம் ஒதுக்குவது தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுவிட்டன'' என்று தன் தரப்பு வாதங்களை முன்வைத்தார். இதனால், தமிழக அரசு  பதிலளிக்க காலை வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மெரினா, அண்ணா சமாதி அருகே  கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இது, தி.மு.க.வினருக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. 

Sponsored


இதுகுறித்து தி.மு.க-வினர் கூறுகையில், ``மூத்த வழக்கறிஞர் வில்சன், ஒருமுறை கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது கருணாநிதி, `நீ வில்சன் இல்லை... `வின் சன்' என்று நகைச்சுவையாகக் கூறினார். அதை, இன்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் வில்சன். மெரினாவில் இடம் ஒதுக்கப்படவில்லை என்ற அறிவிப்பு வந்ததும் தி.மு.க. வழக்கறிஞர்கள் டீம் கட்சித் தலைமையுடன் ஆலோசித்தது. அப்போது, அவசர வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது. ஆர்.எஸ்.பாரதியே வழக்கைத் தொடர்ந்தார். நீதிமன்றம் இன்று விடுமுறை என்றபோதிலும் இந்த வழக்கு விசாரணை நேற்றிரவு தொடங்கி இன்று முற்பகல் வரை நடந்தது. வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் வாசித்தபோது அதைக்கேட்ட வழக்கறிஞர் வில்சன் தலைமையிலான வழக்கறிஞர்கள் கருணாநிதியின் மறைவைத்தாண்டி கண்ணீர் விட்டு அழுதனர். உடனடியாக ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டதும் அவர்களும் வில்சனை வாழ்த்தினார்கள். விடிய, விடிய தூங்காமல் விழித்திருந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள் வில்சன் டீம்" என்றனர். 

Sponsored
Trending Articles

Sponsored