காலத்தை வென்ற எழுத்தாளரை, அரசியல்வாதியை இழந்துவிட்டோம்...! கருணாநிதி மறைவுக்கு நயன்தாரா இரங்கல்Sponsoredகாலத்தை வென்ற எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிகச் சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை இழந்து வாடுகின்றோம் என்று நடிகை நயன்தாரா தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவு குறித்த இரங்கல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடல் நேற்று அதிகாலை 5 மணி முதல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர், மாலை 6 அளவில் மெரினா கடற்கையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், கருணாநிதியின் இறப்புக்கு நயன்தாரா எழுதியுள்ள இரங்கல் கடிதத்தில், 'தங்களுடைய இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது. நம் வாழ்வில் மிகுந்த இருண்ட 24 மணி நேர சோதனை இது எனச் சொல்லலாம். சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம்.

Sponsored


Sponsored


 நாம் காலத்தை வென்ற எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிகச் சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை இழந்து வாடுகின்றோம். நம் மாநிலத்தின் குரலாக 75 ஆண்டுகளாக அவர் குரல் இருந்து வந்து இருக்கிறது. அவர் ஆற்றி இருக்கும் சாதனைகள் எண்ணில் அடங்காதவை. அவர் ஆட்சியில் இருக்கும்போது புரிந்த சாதனைகள் மறக்க முடியாதவை. அவர் பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழகத் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இந்த மீளாத் துயரில் இருந்து மீண்டு வர என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். வெளி ஊரில் நடந்து வரும் படப்பிடிப்பு காரணமாக அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். Trending Articles

Sponsored