`தனியார் ஏஜென்சி சமர்ப்பித்த போலிச் சான்று..!' - 22 இந்திய மாணவர்களின் விசா ரத்துதனியார் ஏஜென்சி மூலம் எம்.பி.ஏ படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்ற 22 இந்திய மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sponsored


அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்வி உயர்நிலை படிப்புக்காகச் செல்லும் மாணவர்கள் தனியார் ஏஜென்சிகளை அணுகி வருகின்றனர். இதனால், ஏற்படக்கூடிய விளைவுகளைப் பெற்றோர்களும் மாணவர்களும் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். அதனால், வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்கள், பாதியில் படிப்பை விட்டுவிட்டு நாடு திரும்பும் அவலம் ஏற்படுகிறது. 

Sponsored


கோவையைச் சேர்ந்த தனியார் ஏஜென்சி மூலம் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 22 மாணவர்கள் எம்.பி.ஏ படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றனர். போலி தேசிய அங்கீகார வாரிய சான்றிதழ்களை ஏஜென்சி சமர்ப்பித்ததால் மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், என்ன செய்வதென்று அறியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள அரசிடம் மாணவர்கள் தரப்பினர் முறையிட உள்ளனர். ஏஜென்சியிடம் அசல் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Sponsored


மேலும், விசா நடைமுறையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு, விசா ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கோவையில் இதுபோன்ற தனியார் ஏஜென்சிகளின் எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.கோவை உள்பட பல்வேறு ஊர்களில் இயங்கும் ஏஜென்சிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Trending Articles

Sponsored