வாகனச் சோதனையில் சிக்கிய 100 கிலோ கஞ்சா! இலங்கைக்கு கடத்த முயன்ற 2 பேர் கைதுSponsoredராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 104 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக கஞ்சா கடத்திச் செல்ல இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி தருவைகுளத்தில் வாகனச் சோதனைச் சாவடியில் சுங்கத்துறை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு காரில் ஒரு சாக்கு மூட்டை இருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தபோது அதில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சாக்கு மூட்டையைப் பறிமுதல் செய்ததுடன்,  இது தொடர்பாக காரில் வந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாண்டி, ராஜாஜி என தெரியவந்தது. முக்கிய குற்றவாளியான அசோக்கை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் எடை 104 கிலோ என்றும் இதன் மதிப்பு ரூ.15  லட்சம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

Sponsored


Sponsored


கடல் அட்டை, கஞ்சா போன்றவை ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகிறது. வெளி மாவட்டங்களுக்கு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களையும், வெளிமாநிலங்களுக்கு பெண்கள் மூலமும் இக்கடத்தல் நடைபெற்று வருகிறது.Trending Articles

Sponsored