ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதி!Sponsoredஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்படி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடுத்த மனுவை விசாரிக்க ஏற்றுக்கொண்டது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். 

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 100 வது நாள் நடைபெற்ற போராட்டத்தில் மோதல் வெடித்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு அளிக்கப்பட்டது. 

Sponsored


இந்த மனுவில், “தூத்துக்குடி சிப்காட் பகுதியில் பல தொழிற்சாலைகள் உள்ளன. ஸ்டெர்லைட் ஆலையால் மட்டுமே மாசு ஏற்படுகிறது என எவ்வித ஆதாரமும் இல்லாமல் குற்றம்சாட்டப்படுகிறது. மாசுபாடு குற்றச்சாட்டு தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எவ்வித விளக்கமும் ஆலை தரப்பில் கேட்கப்படவில்லை.

Sponsored


காப்பர் மணல் இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களின் தூண்டுதலின் பேரில்தான் போராட்டம் நடைபெற்றது. பசுமைத் தீர்ப்பாயம் நியமிக்கும் கண்காணிப்புக்குழுவின் கண்காணிப்பில் ஒரு மாதம் ஆலையை இயக்குகிறோம். அக்குழுவின் அறிக்கையின்படி மாசுபாட்டினை அளவீடு செய்து பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, ஆலையை மீண்டும் இயக்க அனுமதி அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. அப்போது, இது தொடர்பாகத் தமிழக அரசும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு முன் இந்த மனு, கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை இன்று (9.8.2018) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று டெல்லியில் இறுதி விசாரணை நடைபெற்றது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடுத்த மனுமீதான விசாரணையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று நடந்த விசாரணையில், ஆலையைத் திறக்க கூறி வேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றதல்ல, மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற வாதம் தமிழ அரசின் சார்பில் முன்வைக்கப்பட்டது. இதை, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்க மறுத்துவிட்டது. வேதாந்தா குழுமம் தொடுத்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதாகப் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்தது. மேலும், `ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். உற்பத்திப் பணிகளை மட்டும் மேற்கொள்ளக் கூடாது' என்று தீர்ப்பளித்துள்ளது.  அத்துடன், தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை இந்த வழக்கின் மனு தொடர்பாக 10 நாட்களுக்குள் பதில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.Trending Articles

Sponsored