`கவிதாவைத் தொடர்ந்து கைதாகிறாரா திருமகள்?’ - அடுத்த அதிர்ச்சியில் அறநிலையத்துறை!Sponsoredஇந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது செய்யப்படலாம் என்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உற்சவர் சிலை செய்ததில் நடந்த மோசடி வழக்கில் அறநிலையத்துறையின் திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா ஏற்கெனவே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தற்போது நிபந்தனை ஜாமீனில்

இருக்கிறார். இந்நிலையில் அறநிலையத்துறையின் மற்றொரு கூடுதல் ஆணையர் திருமகள் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்று கருதப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். 

Sponsored


இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு நடைபெறும் நிலையில் திருமகளைக் கைது செய்ய திட்டமில்லை என்று காவல்துறை பதில் அளித்துள்ளது. ''இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் திருமகளை ஆறு வாரங்களுக்குக் கைது செய்ய இடைக்காலத் தடை'' என்று வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

Sponsored


 ''சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் திருமகளைக் கைது செய்வதில் அதீத ஆர்வம்காட்டி வருகிறார்கள். இன்னும் சில தினங்களில் திருமகள் கைதாவார் என்றிருந்த நிலையில்தான் முன்ஜாமீன் பெற்றிருக்கிறார். காஞ்சிபுரம் உற்சவர் வழக்கு மட்டும் அல்லாது இன்னும் பிற வழக்குகளிலும் திருமகளுக்குத் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலை காணாமல்போன விவகாரம். திருமகள் கைதாவது உறுதி'' என்கிறது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு வட்டாரம்.Trending Articles

Sponsored