திருமணத்துக்கு எதிர்ப்பு... காதலுக்காக உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண் Sponsoredகாதலன் வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னையைச் சேர்ந்த இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்

மதுரவாயல் புளியம்பேடு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு. இவரின் மகள் சரண்யா. இவர், ப்ளஸ் டூ முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். இவருக்கும் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஜேக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகினார்கள். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் பழகியத் தகவல் சரண்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இதனால் வீட்டில் தகராறு ஏற்பட்டது. மேலும், ஜேக்குடன் பேசக்கூடாது என்று சரண்யாவுக்கு தடைவிதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சரண்யா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மதுரவாயல் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

Sponsored


 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சரண்யாவும் ஜேக் என்பவரும் காதலித்துள்ளனர். இந்தத் தகவலையறிந்ததும் சரண்யாவின் பெற்றோர், ஜேக் வீட்டுக்குச் சென்று திருமணம் குறித்து பேசியுள்ளனர். அப்போது, ஜேக் குடும்பத்தினர் திருமணத்துக்கு மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால்தான் சரண்யா, தற்கொலை செய்துகொண்டதாக அவரின் பெற்றோர் விசாரணையின்போது எங்களிடம் தெரிவித்தனர்" என்றனர்.

Sponsored
Trending Articles

Sponsored