`இது, அடிப்படை உரிமையை மீறும் செயல்' - திருமுருகன் காந்தி கைதுக்கு கொந்தளிக்கும் டி.டி.வி.தினகரன்!Sponsored'திருமுருகன் காந்தி கைதுசெய்யப்பட்டுள்ளது, அடிப்படை உரிமையை மீறும் செயல்' என டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை ஆகிய தமிழகப் பிரச்னைகள் குறித்து  ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசினார். இதைத் தொடர்ந்து, நார்வேயிலிருந்து இன்று அதிகாலை 3.45 மணிக்கு பெங்களூரு விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவரைத் தடுத்த விமான நிலையக் காவலர்கள், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகக் கூறி, விமான நிலையத்தில் கைதுசெய்தனர். கைதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு, திருமுருகனுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதைக் காரணம் காட்டியுள்ளனர். அவரைக் கைதுசெய்து அழைத்து வருவதற்காக தமிழக போலீஸ் பெங்களூரு விரைந்துள்ளது. இந்தக் கைது, தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. பல அரசியல் தலைவர்களும் இந்தக் கைதுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Sponsored


இந்நிலையில், திருமுருகன் கைதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்,``தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை ஐ.நா அவையின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பதிவுசெய்ததற்காக, மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கைதுசெய்யப்பட்டுள்ளது, மனித உரிமை மீறல் மட்டுமல்லாது அடிப்படை உரிமையை மீறும் செயல். திருமுருகன் காந்தியை விமான நிலையத்திலேயே வைத்து கைதுசெய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர், உடனடியாக  நிபந்தனையின்றி விடுதலைசெய்யப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored