டெல்டா மாவட்டங்களில் விதை நெல் தட்டுப்பாடு! - கொந்தளிக்கும் விவசாயிகள்Sponsoredசம்பா சாகுபடிக்கான ஆரம்பகட்டப் பணிகளில் காவிரி டெல்டா விவசாயிகள் தற்போது தீவிரமாகியுள்ளார்கள். இந்தப் பருவத்துக்கு ஏற்ற விதைநெல் கிடைக்காததால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். வேளாண்மைத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள்.

கடந்த ஆண்டுகளில் காவிரிநீர் கிடைக்காததால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி வெற்றிகரமாக நடைபெறவில்லை. இதனால் இப்பகுதி விவசாயிகள் வருமானத்தை இழந்து பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்கள். இந்த ஆண்டு இன்ப அதிர்ச்சியாக மேட்டூர் அணை முழுமையாக நிரம்பி டெல்டா பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் சம்பா நெல் சாகுபடிக்கான ஆரம்பகட்ட வேலைகளில் விவசாயிகள் மும்முரமான நிலையில், கொஞ்சமும் எதிர்பாராத நிலையில் விதைநெல் தட்டுப்பாடு விவசாயிகளை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

Sponsored


இதுகுறித்துப் பேசிய விவசாயிகள், ‘முன்பட்ட சம்பாவுக்கு ஜூலை 15-ம் தேதி முதல் ஆகஸ்டு 15-ம் தேதிக்குள் விதைப்பு செஞ்சாகணும். இதுக்கு 155 நாள் வயசுள்ள நீண்டலாக ரகமான சி.ஆர் -1009 மிகவும் ஏற்றது. இதுலதான் பூச்சி, நோய்த்தாக்குதல் அதிகமாக ஏற்படாது. நெல்மணிகள் நன்கு திரட்சியாகக் கூடுதல் எடையுடன் இருக்கும். மகசூலும் அதிகமாகக் கிடைக்கும். ஆனால், இந்த விதைநெல் வேளாண் விரிவாக்க அலுவலகத்திலும் கிடைக்கலை. தனியார் கடைகள்லயும் இல்லை. வேளாண்மைத்துறை அதிகாரிகள் முன்கூட்டியே இதை தயார் நிலையில் வச்சிருந்திருக்கணும். எப்படி இந்தளவுக்கு அலட்சியாக இருந்தாங்கணுதான் தெரியலை. காவிரி டெல்டாவுக்கு விவசாயம் தான் உயிர்நாடி. விவசாயத்துக்கு விதைநெல்தான் உயிர்நாடி. இந்தத் தட்டுப்பாட்டை சாதாரணமாக எடுத்துக்க முடியாது. தங்களோட கடமைகளை ஒழுங்காகச் செய்யாத வேளாண் அதிகாரிகள் மீது தமிழக அரசு துறைரீதியான நடவடிக்கை எடுக்கணும்” எனக் கொந்தளிப்புடன் பேசினார்கள்.   

Sponsored
Trending Articles

Sponsored