`இதற்கெல்லாம் கலங்கப்போவதில்லை!' - ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்Sponsoredதி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தி.மு.க தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, அவரின் உடலை மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய தீர்மானித்து, அதற்காக தமிழக அரசிடம் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சட்டச் சிக்கல் உள்ளதாகக் கூறி அவருக்கு இடம் தர தமிழக அரசு மறுத்தது. இதையடுத்து, தி.மு.க தரப்பு நீதிமன்றத்தை நாடியது. வழக்கின் முடிவில், மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, அண்ணா சமாதி அருகே கருணாநிதியின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Sponsored


இந்நிலையில், இன்று வெளியான முரசொலி நாளிதழில் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குமாறு முதல்வரிடம் கேட்டதற்கு காழ்ப்பு உணர்ச்சியாலும், ஆட்டுவிப்போரின் சூழ்ச்சியாலும் அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுத்தார் எனக் கூறப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருணாநிதி இறுதிச் சடங்குக்கு தமிழக அரசு செய்த உதவிகளைப் பட்டியலிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மெரினாவில் புதிய நினைவிடங்கள் அமைப்பது தொடர்பாக ஐந்து வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த சட்டச் சிக்கல்கள்தான் அண்ணா சதுக்கத்தில் இடம் தர முடியாமல் போய், காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. இதில் ஏது காழ்ப்பு உணர்ச்சி? ஜெயலலிதாவின் நினைவிடத்தை மெரினாவில் இருந்து அகற்றுவோம் எனவும், அவரின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் இருந்து அகற்றுவோம் எனவும் மேடைபோட்டுப் பேசிய தி.மு.க-வினருக்கு மனசாட்சி இருக்கிறதா?. குத்திக்காட்ட வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை. 

Sponsored


முதல்வராக இருந்த காமராஜர், ஜானகி ஆகியோர் மறைந்தபோது, அவர்களுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் கேட்கப்பட்டது. வழக்குகள் ஏதும் இல்லாத அப்போதைய காலகட்டத்திலே, முதல்வராக இருந்து மரணமடைவோருக்குத்தான் மெரினாவில் இடம் அளிக்கப்படும் என கருணாநிதி கூறியதை இப்போது நினைவுபடுத்துகிறேன். எங்கள்மீது குற்றம் சாட்டும் தி.மு.க-வுக்கு, அ.தி.மு.க அரசின் களங்கமில்லா வெள்ளை மனம் புரியவே புரியாது. ஆனால், தமிழக மக்கள் இதைப் புரிந்துகொள்வார்கள். இதற்கெல்லாம் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் உட்பட நாங்கள் கலங்கப்போவதுமில்லை, கடமை தவறப்போதுமில்லை" என்று கூறியுள்ளார்.Trending Articles

Sponsored