கருணாநிதி நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு திடீர் தடை!Sponsoredறைந்த தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல், சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா நினைவக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வு நடைபெற்ற நேற்று இரவு முதலே, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பொதுமக்களும், தி.மு.க கட்சியைச் சார்ந்தவர்களும் அவரது நினைவிடத்தில் திரளத் தொடங்கினர். குறிப்பாக இன்று காலை முதல் பொதுமக்களுடன், பல பிரபலங்களும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை கருணாநிதியின் குடும்பத்தினர் அவரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்தாலும், ஏராளமான பொதுமக்கள் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திவந்தனர். 

Sponsored


இந்த நிலையில், இன்று இரவு 10 மணிக்குப் பிறகு கருணாநிதியின் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடைவிதிக்கப்பட்டது. இதனால், அண்ணா நினைவக வளாகத்தில் அமைந்துள்ள நுழைவு வாயில் பகுதியிலேயே பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

Sponsored


கருணாநிதியின் நினைவிடத்தில் தரைதள கற்கள் பதிக்கும் பணிகளும், சில கட்டுமானப் பணிகளும் வேகமாக நடைபெற்றுவருகின்றன. இதனால்தான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தத் தடைவிதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டிருக்கும் காவல்துறையினர் தெரிவித்தனர். நாளை காலை 7 மணி முதல் மக்கள் தொடர்ந்து கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தலாம் எனவும் போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. Trending Articles

Sponsored