கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை!Sponsoredஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதம் அமாவாசை தினமான நாளை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆறு உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் செய்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். குழித்துறை நகராட்சி சார்பில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு வாவுபலி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தர்ப்பணம் செய்யச் செல்பவர்கள் மரங்களை வாங்கி நடுவது வழக்கம். ஆடி அமாவாசை அன்று நடப்படும் மரங்கள் எந்தவித நோய் தாக்குதலும் இல்லாமல் செழித்து வளரும் என்பது ஐதீகம். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் செய்ய ஏதுவாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மத்திய அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன் நிதியில் ரூ.25 லட்சம் செலவில் புதிய படித்துறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored