ஸ்டாலின் சந்திப்புக்குப் பிறகு அவசர செயற்குழு தேதியை அறிவித்தார் அன்பழகன்!Sponsoredதி.மு.க செயற்குழு வரும் ஆகஸ்ட் 14-ல் சென்னையில் கூடுவதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். 


 

தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு நடக்கும் முதல் செயற்குழு கூட்டம் இது. தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனை அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் இன்று காலை சந்தித்துப் பேசினார். கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகம் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து  ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்டோர் இருந்தனர்.

Sponsored


இதையடுத்து வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி காலை 10 மணியளவில் தி.மு.க தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுவதாக அன்பழகன் அறிவித்துள்ளார்.  தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது! 

Sponsored
Trending Articles

Sponsored