தி.மு.க செயற்குழுவில் என்னனென்ன தீர்மானங்கள் - அன்பழகனுடன் ஸ்டாலின் சந்திப்பின் பின்னணி Sponsoredதி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள்  இன்று சந்தித்தனர்.  இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 14-ம் தேதி அவசர செயற்குழு நடைபெறும் என அன்பழகன் அறிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவரின் உடல் அரசு மரியாதையுடன் அண்ணா நினைவிடத்தில் ஆகஸ்ட் 8-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு செயல்தலைவர் ஸ்டாலின் சென்று அஞ்சலி செலுத்தினார்.  மேலும், அங்கு ஏராளமான தொண்டர்கள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். கருணாநிதியின் படமும், அவரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்களால் உதய சூரியனும் வரையப்பட்டுள்ளது. ஏராளமானவர்கள் வருவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுச் செயலாளர் அன்பழகனும் செயல் தலைவர் ஸ்டாலினும் இன்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

Sponsored


``தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்த சமயத்தில்தான் கருணாநிதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் பொதுக்குழு தள்ளிப்போகும் என்று தி.மு.க-வினர் தெரிவித்தனர். இதனால் அவசர செயற்குழு கூட்டத்தை நடத்த கட்சித் தலைமை முடிவு செய்தது. அதன்படி ஆகஸ்ட் 14-ம் தேதி இந்தக்கூட்டம் நடத்தப்படுகிறது. கூட்டத்தில் கருணாநிதியின் படத்திறப்பு, ராயப்பேட்டையில் நினைவு பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. அதோடு கட்சித் தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது'' என தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 

Sponsored


கருணாநிதி மறைவுக்குப்பிறகு நடக்கும் முதல் கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. Trending Articles

Sponsored