மூணாறில் கடும் நிலச்சரிவு! சிக்கிக்கொண்ட 60 பேரை மீட்கப் போராடும் ராணுவம்!மூணாறில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் 60 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க ராணுவத்தினர் போராடி வருகின்றனர்.

கேளர மாநிலத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் வீட்டு மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மூணாறில் உள்ள விடுதி ஒன்றின் அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் 60 பேர் வரை சிக்கிக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Sponsored


இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறில் பள்ளிவாசல் பகுதியில் உள்ளது தனியார் விடுதி. அதன் அருகில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 60-க்கு மேற்பட்டோர் விடுதியிலேயே சிக்கித்தவிக்கிறார்கள். தகவல் அறிந்து வந்த பேரிடர் மீட்புக்குழு மற்றும் ராணுவத்தினர், சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். ஆனால், மேலும் மேலும் மண் சரிவதாலும் தொடர் மழை காரணமாகவும் தண்ணீர் சூழ்ந்துள்ளதாலும் மீட்புப் பணியில் ஈடுபட முடியவில்லை.

Sponsored


இந்நிலையில், சிலர் தண்ணீரில் குதித்துத் தப்பிவிட முயற்சி செய்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது என்று அறிவுறுத்தும் மீட்புக்குழுவினர், பாதுகாப்பாக விடுதிக்குள் இருக்குமாறு அறிவுறுத்திவருகிறார்கள். அனைவரும் பயத்துடனும் தங்களைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடனும் காத்திருக்கிறார்கள்.

Sponsored
Trending Articles

Sponsored