ராமநாதபுரம் அருகே எரிவாயுக்குழாயில் உடைப்பு! - கிராம மக்கள் பதற்றம்



Sponsored



ராமநாதபுரம் அருகே எரிவாயு எடுத்துச்செல்லும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு எரிவாயு வெளியேறியதால், கிராம மக்கள் பதற்றம் அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில்  வழுதூர், தெற்கு காட்டூர்,ரெகுநாதபுரம் போன்ற பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் (ஓ.என்.ஜி.சி) சார்பில் பல்வேறு இடங்களில் இயற்கை எரிவாயு சேகரிக்கப்பட்டுவருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் எரிவாயு, நிலத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள்மூலம்  ராமநாதபுரம் அருகேயுள்ள தெற்கு காட்டூரில் செயல்பட்டுவரும் ஓ.என்.ஜி.சி-யின் எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனத்துக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.

Sponsored


 இந்நிலையில், எரிவாயு எடுத்துச்செல்லும் குழாய் ஒன்றில் இன்று மதியம் திடீர் என வெடிப்பு ஏற்பட்டுள்ளது. தெற்கு காட்டூரில் உள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு  500 மீட்டர் தூரத்தில் தனியாருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் பதிக்கப்பட்டிருந்த பைப் ஒன்றில் இந்த உடைப்பு ஏற்பட்டு, அதன் வழியாக எரிவாயும் தண்ணீரும் சேர்ந்து  கொப்பளித்துக்கொண்டு வெளியேறியுள்ளது. இதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து ஒ.என்.ஜி.சி.அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 

Sponsored


இதையடுத்து அங்கு வந்த ஓ.என்.ஜி.சி அதிகாரிகள், குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் எரிவாயு வெளியேறுவதுகுறித்து ஆய்வுசெய்தனர். நிலத்தின் அடியில் புதைக்கப்பட்டுள்ள எரிவாயுக் குழாயில் 3 முதல் 4 அடி நீளம் வரை உடைந்து, எரிவாயு மற்றும் தண்ணீர் வெளியேறியது இந்த ஆய்வில் தெரியவந்தது. மேலும், எரிவாயு மற்றும் தண்ணீர் வெளியேற்றத்தால் சுமார் ஒன்றரை அடி ஆழம் வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக எரிவாயுக் கசிவு ஏற்பட்டு கொப்பளித்துக்கொண்டிருப்பதைத் தடுத்துநிறுத்தும் பணியில் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.  கடந்த சில நாள்களுக்கு முன் திருப்புல்லாணி பகுதிகளில் எரிவாயுக்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களைச் சுற்றி திடீர் வெடிப்புகள் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்நிலையில், தற்போது எரிவாயுக்குழாய் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால்  எரிவாயு வெறியேறுவதைக் கண்டு தெற்குகாட்டு கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் வட்டாட்சியர் சிவக்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.



Trending Articles

Sponsored