கரும்பு கொள்முதலுக்கு பணம் தராத சர்க்கரை ஆலை..! போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்



Sponsored



சிவகங்கை மாவட்டத்தில் சர்க்கரை ஆலை பணப்பட்டுவாடா செய்யாததைக் கண்டித்து கரும்பு விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்

படமாத்தூர் சக்தி சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு இந்த ஆண்டு தர வேண்டிய பாக்கி 33 கோடி ரூபாய் ஆகும். விவசாயிகளிடம் பிடித்தம் செய்தத் தொகையை வங்கிகளில் செலுத்தாததால் விவசாயிகளின் வங்கி வரவு செலவு முடங்கிக் கிடக்கின்றது. வங்கிகளில் அடமானம் வைத்திருக்கிற நகையைத் திருப்ப முடியாமல் நகைகள் ஏலத்திற்கு விடும் அவலநிலை தொடர்கிறது. சர்க்கரை ஆலை நிர்வாகம் லாபத்தில் பங்குத் தொகை 73 கோடி ரூபாய் தர வேண்டி உள்ளது. ஒவ்வொரு முறையும் காரணங்களை மட்டும் சொல்லிக் கொண்டு விவசாயிகளுக்குக் கரும்பு பாக்கி ரூபாயைத் தரமறுக்கிறார்கள் ஆலை நிர்வாகத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூவந்தி, அரசனூர், இலுப்பக்குடி, உசிலம்பட்டி, படமாத்தூர், கானூர், கல்லூரணி, பச்சேரி, மீனாட்சிபுரம், அருளானந்தபுரம், இடைக்காட்டூர், மழவரயனேந்தல், அன்னியேந்தல், வெள்ளிக்குறிச்சி,வேலங்குளம், மாரநாடு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களிலுள்ள  கரும்பு விவசாயிகள், அவர்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Sponsored


இது குறித்து கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தண்டியப்பன், மாவட்டச் செயலாளர் சக்திவேல் ஆகியோர் பேசும் போது, 'ஒவ்வொரு ஆண்டும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் கரும்பு விவசாயிகளுக்கு மட்டும் கசப்பான ஆண்டாக அமைந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு சக்தி சர்க்கரை ஆலை, விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்து விட்டது. விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள், பொதுத்துறை வங்கிகளில் நாங்கள் வாங்கிய கடனுக்கான தொகையை ஆலை நிர்வாகம்  எங்களிடம் இருந்து பிடித்தம் செய்து விட்டது. ஆனால் சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. இந்த நிலையில் வங்கிகள் விவசாயிகளின் நகைகளை ஏலம் விடுகிறார்கள். இதையெல்லாம் கண்டித்து தான் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்று தெரிவித்தனர். 

Sponsored




Trending Articles

Sponsored