மாணவர்கள் விரும்பும் பள்ளிகளில் படிக்க உத்தரவிட்டு அசத்திய ஆட்சியர்!கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை, ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் ரூ.1.14 கோடிமதிப்பில் கட்டப்பட்ட  பள்ளி மாணவியர் விடுதியைக் காணொலிக்காட்சியின் மூலம் முதல்வர் திறந்துவைத்ததையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் குத்துவிளக்கேற்றி இனிப்புகள் வழங்கினார்.

  
 

Sponsored


கரூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 19 பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 1,215 மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.  தற்போது புதிதாக திறக்கப்பட்ட விடுதியில் 100 மாணவியர்கள் தங்கி படிக்கவுள்ளனர். இந்த விடுதியைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் குத்துவிளக்கேற்றி இனிப்புகள் வழங்கினார். மேலும், அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பில் நன்மதிப்பென் பெற்ற 8 மாணவ, மாணவிகளுக்கு 6-ம் வகுப்பு படிப்பதற்கு அவர்கள் விரும்பும் பள்ளியில் படிப்பதற்கான உத்தரவை வழங்கினார். அதேபோல், அரசுப் பள்ளிகளைச் சார்ந்த 10-ம் வகுப்பில் நன்மதிப்பென் பெற்ற 8 மாணவ, மாணவிகளுக்கு 11-ம் வகுப்பு படிப்பதற்கு அவர்கள் விரும்பும் பள்ளியில் படிப்பதற்கான உத்தரவையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored