ஹெலிகாப்டரை விரும்பாத கேரள முதல்வர்! - காரில் செல்ல முடியாததை உணர்த்திய அதிகாரிகள்Sponsoredகேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், விமானப்படை விமானம் மூலம் இன்று காலை புறப்பட்டார்.

வெள்ளப் பாதிப்புகள் அதிகம் இருக்கும் இடுக்கி மாவட்டத்துக்கு முதலில் சென்ற பினராயி விஜயன், அங்கிருக்கும் கட்டப்பனை என்ற இடத்துக்குச் சென்றார். அங்குள்ள வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டார் அதைத்தொடர்ந்து கார் மூலமாக மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், பல இடங்களில் தொடர் மழை மற்றும் வெள்ள நீரால் சாலை துண்டிக்கப்பட்டு இருப்பதால் ஹெலிகாப்டரில் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதை விருப்பம் இல்லாமல் ஏற்றுக்கொண்டு, ஹெலிகாப்டர் மூலம் மாவட்டம் முழுவதுமான வெள்ள சேதங்களைப் பார்வையிட்டுவிட்டு வயநாடு மாவட்டத்துக்குச் சென்றார். அங்கிருந்து காரில் புறப்பட்ட முதல்வர் பினராயி விஜயன், வெள்ளத்தால் தங்கள் உடைமைகளையும், அதை வைத்திருந்த வீட்டையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Sponsored


அவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் உணவு, தண்ணீர் குறித்து கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டுவிட்டு, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று நேரில் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வருடன், மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் உள்ளனர். முன்னதாகப் பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்வர், கேரளா `இதுவரை கண்டிராத பெருந்துயரத்தை கண்டுள்ளது' எனக் கூறினார்.

Sponsored
Trending Articles

Sponsored