தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கை இப்படி எதிர்கொள்ளுங்கள்! - ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் யோசனைSponsored``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக  வலுவான அறிவியல் ஆதாரங்கள் உள்ளது. அரசுத்தரப்பு தனது வாதத்தைப் பலப்படுத்த வேண்டும். தமிழகத்தில் இதுபோல தாமிர ஆலையை எங்குமே இயங்க அனுமதி அளிப்பதில்லை என்ற புதிய கொள்கை முடிவை எடுக்க வேண்டும்” என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

 ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து, வேதாந்தா குழுமம் சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அம்மனு மீதான விசாரணை கடந்த 2 நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில், நிர்வாகப்  பணிகளை மேற்கொள்ள மட்டும் ஆலைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதில் உற்பத்தி பணிகளோ, பராமரிப்பு பணிகளோ மேற்கொள்ள அனுமதி கிடையாது எனக் கூறி விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. அத்துடன், வரும் ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் ஆலை ஏற்படுத்தும்  மாசுகள் குறித்த  அறிவியல் ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் எனத் தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது. 

Sponsored


இதுகுறித்து துாத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியை பாத்திமா பாபு, “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. தூத்துக்குடியில் தற்போதுதான் மக்களிடையே மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. இந்த நேரத்தில், பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு, ஆலை மீண்டும் இயங்கத் தொடங்கிவிடுமோ என்று, மக்களுக்கு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Sponsored


ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளையும் சட்ட திட்டங்களையும் மீறிதான் இங்கு செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு எதிராக வலுவான அறிவியல் ஆதாரங்கள் உள்ளன. போலியான காரணங்களைப் பசுமைத் தீர்பாயத்தில்  கூறி  தப்பித்துக்கொள்ளவும், தங்களை நியாயப்படுத்தவும் ஆலைத் தரப்பு முயல்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் அரசு வெளியிட்ட அரசாணையை நம்புகிறோம். ஆனால், அரசு அதைப் பலப்படுத்த வேண்டும். அரசின் கொள்கை முடிவில் தெளிவாக இருந்து, ஆலைக்கு எதிரான அறிவியல் ஆதாரங்களை சமர்பித்தும் மக்களின் எதிர்ப்பைக் காட்டியும்  பசுமைத் தீர்பாயத்தில் நிலையாக வாதாட வேண்டும். என நாங்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். தமிழகத்தில் இதுபோல தாமிர ஆலையை எங்குமே இயங்க அனுமதி அளிப்பதில்லை என்ற புதிய கொள்கை முடிவை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுகாதார ஆய்வை நடத்தி அதை நீதிமன்ற வாதத்துக்குப் பயன்படுத்திட வேண்டும்” என்றார்.Trending Articles

Sponsored