ராகுல்காந்திக்கு உரிய மரியாதை தரப்படவில்லை! - திருநாவுக்கரசர் ஆவேசம்Sponsoredதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உரிய மரியாதை தரப்படவில்லை எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.


தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7-ம் தேதி காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் தேவகௌடா எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இது தொடர்பாகப் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், `தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்த ராகுல் காந்திக்கு காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை' எனக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ராஜாஜி அரங்கத்தில் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கும் காவல்துறையினர் முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என சி.பி.எம் ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Sponsored 

Sponsored
Trending Articles

Sponsored