தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் - திரையுலகினருக்கு நடிகர் சங்கம் அழைப்பு!Sponsoredமறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஆகஸ்ட் 13-ம் தேதி நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் எனத் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து, மெரினாவில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் எனத் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், `மறைந்த முன்னாள் முதல்வரும் கலை இலக்கிய திரைத்துறை பிதாமகனுமான, டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு திரை உலகம் ஒன்று சேர்ந்து ஆகஸ்ட் 13-ம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணி முதல் சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் திரைத்துறையைச் சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகளும், சங்க உறுப்பினர்களும் பங்கேற்குமாறு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் கேட்டுக்கொள்கின்றன' என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored