`திருமுருகன் காந்தி கைது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!' - பா.இரஞ்சித் கண்டனம்Sponsoredமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள லலித்கலா அகாடமியில் ஓவியர் அந்தோணி முனுசாமி வரைந்த பென்சில் ஓவியங்களின்   கண்காட்சியைத் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் தொடங்கி வைத்தார். இதில், காரல் மார்க்ஸ், பெரியார், அண்ணா, காமராஜர், உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஓவியங்கள், மற்றும் குத்துச்சண்டை வீரர் முகமது அலி உள்ளிட்ட விளையாட்டு வீரர்களின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஒவியங்களை இயக்குநர் பா.ரஞ்சித் பார்வையிட்டார்.

Sponsored


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ``ஓவியங்களின் மீது மக்களுக்கு ஆர்வமிருக்கிறது. மக்களிடம் ஓவியங்களை கொண்டுபோய் சேர்க்க வேண்டும். தமிழக அரசுக்கு கலைகள் மீது அக்கறையில்லை. கவின் கலை கல்லூரிகளின் கட்டமைப்பு மோசமாக உள்ளது. கருத்து சுதந்திரம் என்பது தனி நபர் தாக்குதல் அல்ல. கருத்துச் சுதந்திரம் சிதாந்தங்களின் அடிப்படையில் விவாதிப்பது. அதற்கான இடம் இங்கு இல்லை. கலைஞர்களையும் ஓவியக்கலை உள்ளிட்ட எந்த கலைகளையும் ஊக்குவிக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை’’ என்றார். தொடர்ந்து பேசிய அவர்,மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது தவறானது என்றும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் கண்டனம் தெரிவித்தார். 

Sponsored Trending Articles

Sponsored