வீராணம் ஏரியிலிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக 5 மாதங்களுக்குப் பின் நீர் திறப்பு!Sponsoredதமிழகத்தில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் வீராணம் ஏரியும் ஒன்று. இந்த ஏரி சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகா விவசாயிகளின் வாழ்வாதரமாக விளங்கி வருகிறது. இதன் மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

வீராணம் ஏரியில் இருந்து சென்னை நகர மக்களின் குடி நீர் தேவைக்காக விநாடிக்கு 72 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததாலும், காவிரி தண்ணீர் வராததாலும் ஏரி வறண்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி முதல் 5 மாதங்களாக சென்னைக்குக் குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. தற்பொழுது, கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டி, கடந்த மாதம் 19ம் தேதி அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு கல்லணைக்கு வந்தது. தொடர்ந்து மார்ச் 22ம் தேதி கல்லணையில் இருந்து கொள்ளிடத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.  இதனால், நாகை மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணை  முழுகொள்ளவான 8 அடியை எட்டியது. இதனையடுத்து கீழணை திறக்கப்பட்டு வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டதால், ஏரியின் நீர் மட்டம் கிடு, கிடு என உயர்ந்து ஏரியின் முழு கொள்ளவான 47.50 அடியில், தற்பொழுதைய நீர்மட்டம் 46.70 அடியாக உள்ளது. 

Sponsored


Sponsored


தற்பொழுதும் வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிக்கிறது. வீராணம் ஏரி முழு கொள்ளவை எட்டி வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று முதல் வீராணம் ஏரியில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 55 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. தொடர்ந்து வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க  வாய்ப்புள்ளதால், சென்னையின் குடிநீர் தேவைக்காக அனுப்பப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிகப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Trending Articles

Sponsored