`ஆதரவற்றவர்களுக்கு உதவும் மனிதநேயமிக்க மாணவர்கள்' - திருநெல்வேலியைக் கலக்கும் `மனிதம்' அமைப்பு!Sponsoredதிருநெல்வேலியின் சாலைகளில் பயணிக்கும் போது ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டால் `மனிதம்' வாட்ஸ் அப் குழுவிற்குத் தகவல் வருகிறது. அடுத்த சில மணி நேரத்தில் சதகத்துல்லா அப்பா கல்லூரி மாணவர்கள் அங்கே சிட்டாய் பறந்து வருகிறார்கள்.

உடையோடு ஒரு மாணவர், உணவோடு ஒரு மாணவர் அவர்களுக்கு அருகில் அமர்கிறார்கள்; ஆதரவாய் கரம் பற்றுகிறார்கள்; அன்பாய் உணவு தருகிறார்கள்; புதிய ஆடைகளையும், போர்வைகளையும் தருகிறார்கள். நெல்லைப் பகுதியில் பிரபலமாயிருக்கும் 'மனிதம்' அமைப்பு குறித்து அதை நிறுவிய சதகத்துல்லா அப்பா கல்லூரி முதல்வர் முனைவர்.மு.முஹம்மது சாதிக்கிடம் பேசிய போது, "கல்வி என்பது வகுப்பில் கற்பது மட்டும் அல்ல, சக மனிதர்களின் மீதான அக்கறையும் கல்வி தான்.

Sponsored


கல்லூரி பேருந்தில் பயணித்து வரும் மாணவ, மாணவியர் சாலையோரங்களில் ஆதரவற்று வாழும் நூற்றுக்கணக்கான மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகப் பாவலர். அறிவுமதி தலைமையில் கடந்த ஆண்டு மனிதம் அமைப்பைத் துவங்கினோம். மனிதம் காக்கும் மாணவர் படையோடு பேராசிரியர்களும் இப்பணியில் துணை நிற்கிறார்கள்" என்கிறார். 

Sponsored


இதற்கான நிதியை ஆசிரியர்களும், மாணவர்களும் தாமாகவே முன் வந்து அளிக்கின்றனர். பண உதவி மட்டுமின்றி ஆடைகள், போர்வைகள் போன்ற பொருளுதவிகளும் செய்கின்றனர். இவர்களின் முயற்சியை அறிந்து அக்கல்லூரிக்கு அருகே அமைந்துள்ள தனியார் பள்ளி நிர்வாகமும் பிரதி மாதம் தங்களால் இயன்ற நிதியைத் தந்து உதவுகிறது. மாணவர்களிடம் அவர்களைச் சந்திக்க செல்லும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கேட்ட போது, "அவர்களை அணுகும் முறையே சவால் தான், சிலரை அணுகுவது எளிது சிலர் வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்தவர்களாக இருப்பதால் தகவல் பரிமாற்றமே கேள்வி குறியாகிவிடும் இன்னும் சிலர் எங்களை நெருங்கவே விடாமல் தாக்க கூட முயற்சி செய்து உள்ளனர். ஆனாலும் அவர்களுக்கு உதவும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அளப்பரியது. எதிர்காலத்தில் இவர்களுக்காக ஒரு இல்லம் அமைப்பது எங்கள் கனவு" என்று கூறி உற்சாகத்துடன் விடைபெறுகின்றனர் 'மனிதம்' அமைப்பினர்.Trending Articles

Sponsored