கேரளாவில் வெள்ள பாதிப்பு..! கமல்ஹாசன், சூர்யா நிதியுதவிSponsoredகேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழைக்கு இதுவரை சுமார் 32 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக இல்லாத மழைப்பொழிவை கேரளா சந்தித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள 24 முக்கிய அணைகளும் முழு கொள்ளளவை எட்டியதால், அவற்றிலிருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளதை அடுத்து, தாழ்வானப் பகுதிகளில் உள்ள மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் மாநில அரசும், பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் `கேரளா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு மழை அழிவை எதிர்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டமைப்பது கடினமான பணியாக இருக்கும். இதனால் நிவாரண பணிகளுக்கு அனைவரும் தாராளமாகப் பங்களிக்க வேண்டும்" என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். 

Sponsored


அவரின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாகப் பலரும் உதவிகளை அறிவித்து வருகின்றனர். கர்நாடக அரசு சார்பில் ரூ.10 கோடியும், தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடியும் நிவாரண உதவியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் ரூ.1 கோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார். தமிழக திரையுலக பிரபலங்களும் கேரள மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். அந்தவகையில், நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது நடிகர் கமல்ஹாசனும் ரூ.25 லட்சம் அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அதேபோல் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியும் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் அளிக்கவுள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored