ஈரோட்டில் கால்நடைகள் சந்தை..! பொதுமக்களைக் கவர்ந்த குதிரைகள்Sponsoredஈரோடு மாவட்டம் அந்தியூரில் புகழ்பெற்ற குருநாதசுவாமி கோவில் திருவிழாவையொட்டி கால்நடைச் சந்தை வியாபாரம் களை கட்டியது. இதனை ஏராளமான மக்கள் ஆர்வத்தோடு கண்டு ரசித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் அருகே அமைந்திருக்கிறது குருநாதசுவாமி கோவில். கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் பழமையான கோவில் இது. ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் முதல் புதன்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கி, அடுத்தடுத்த புதன் கிழமைகளில் கொடியேற்றுதல், வன பூஜை என திருவிழா களைகட்டும். இந்த திருவிழாவில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள். இந்தத் திருவிழாவின் போது நடைபெறும் கால்நடைச் சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் குறிப்பாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்தச் சந்தைக்காக இறக்குமதியாகும் குதிரைகளைக் காண கண்கோடி வேண்டும். திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தில் குதிரைகளை வாங்குவதற்காக இந்த சந்தை உருவாக்கப்பட்டது என்று சொல்கின்றனர். அந்தவகையில், தென்னிந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு இங்கு பிரம்மாண்டமான முறையில் குதிரைச் சந்தை ஒவ்வொரு வருடமும் திருவிழாவின் போது நடைபெற்று வருகிறது.

Sponsored


சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் இந்த கால்நடைச் சந்தைக்காக விவசாயிகள் தாமாகவே முன்வந்து சந்தை நடத்துவதற்காக தங்களுடைய நிலங்களை வழங்குகின்றனர். காத்தியவாரி, மார்வாரி, ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் பஞ்சகல்யாணி என 50 ஆயிரத்தில் தொடங்கி 50 லட்சம் விலை கொண்ட விதவிதமான குதிரைகள் ஒய்யாரமாக காட்சியளித்தன. அதுமட்டுமல்லாமல், நாட்டு மாடுகள், ஆடுகள், விதவிதமான நாய் வகைகள் மற்றும் கால்நடைகளை அலங்கரிக்கும் கயிறுகள் மற்றும் பொருட்கள் என திரும்பும் திசையெல்லாம் கால்நடைகளின் வாசனை தான். 

Sponsored


புஸுபுஸுவென இருந்த ஆஸ்திரேலியன் ஆட்டைப் பார்த்தவர்கள், ‘ஆஸ்திரேலியாவுல ஆடு கூட எவ்ளோ வெள்ளையை இருக்கு பாரேன்’ என வெள்ளந்தியாக சிரித்து மகிழ்ந்தனர். மேலும், இசைக்கேற்ப நடனமாடும் அலங்கரிக்கப்பட்ட குதிரையையும் மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். அந்தியூரில் நடைபெறும் இந்த கால்நடைச் சந்தை குதிரைக்குத் தான் பேமஸ். ஆனால், இந்த வருடம் நாட்டு மாடுகள் வைக்கப்பட்டிருக்கும் அரங்குகளில் எக்கச்சக்கமான கூட்டம். அழிந்துவரும் நாட்டு மாடு இனங்களை வாங்க வேண்டும் என மக்கள் காட்டிய ஆர்வம் ஆசம். வருடா வருடம் நடக்கும் இந்த கால்நடைச் சந்தைக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவால் இந்த ஆண்டும் அந்தியூர் கால்நடைச் சந்தை களைகட்டியது.Trending Articles

Sponsored