சென்னை உயர்நீதிமன்றத்தின் 3-வது பெண் தலைமை நீதிபதி -பதவியேற்றார் தஹில்ரமணிSponsoredசென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தஹில்ரமணி இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்துவைத்தார். 

முன்னதாக உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையின் படி சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். இதையடுத்து மும்பை உயர்நீதின்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த தஹில்ரமணி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டார். 

Sponsored


இன்று காலை சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இவருக்குப் பதவி பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

Sponsored


தஹில்ரமணி 1982 முதல் மும்பை மற்றும் கோவா நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர் 2001-ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். தற்போது இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை தஹில்ரமணி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Trending Articles

Sponsored