`தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' - கனமழை குறித்து ஆர்.பி.உதயகுமார்!Sponsoredசென்னை சேப்பாக்கத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கனமழை காரணமாக தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,30,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அதுபோல் அணையிலிருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 359 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 4 நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காவிரி கரையோரம் மாவட்டங்களான தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் கால்வாய் மற்றும் பிற நீர் நிலைகளின் வழியாக வெளியேறும்போது நீச்சல், மீன்பிடித்தல் மற்றும் பிற பொழுதுபோக்கு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி ஆற்றங்கரையில் குளிக்கவும் மற்றும் விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் சில இடங்களில் வரும் 13 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ஆற்றங்கரை ஓரங்களில் பொது மக்கள் செல்பி எடுப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரிலும் பெரிதும் பாதிக்கக் கூடிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored