`கனத்த இதயத்துடன் கருணாநிதி வீட்டுக்குள் நுழைந்தேன்' - வைரமுத்து உருக்கம்!Sponsoredதி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு,  அவரது வீட்டுக்கு கனத்த இதயத்துடன் சென்றதாக கவிஞர் வைரமுத்து உருக்கமாக தெரிவித்துள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். மெரினாவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது மறைவுக்குப் பின் கோபாலாபுர இல்லத்துக்கு, கவிஞர் வைரமுத்து இன்று சென்றார். அங்கு தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

Sponsored


இந்த சந்திப்புக்கு பின், கோபாலபுரம் வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், `கருணாநிதி மறைந்த பிறகு முதல் முதலாக, அவர் இல்லாத வீட்டுக்குள் நுழைகிறோம் என்ற கனத்த மனத்தோடு உள்ளே நுழைந்தேன். உள்ளே நுழைந்து ஸ்டாலின் மற்றும் நண்பர்களோடு அமர்ந்திருந்த போது எனக்கு ஒன்று தோன்றியது. கருணாநிதியின் எண்ணங்கள் இந்த வீட்டுக்குள் நிறைந்திருக்கின்றன. அவரது மூச்சு, சுவாசம் இந்த வீட்டின் ஒவ்வொரு அறையிலும் நிறைந்திருக்கிறது.

Sponsored


அவரது தமிழ் இந்த இல்லத்துக்குள் நிறைந்திருக்கிறது. தமிழர்களுக்கு தமிழ் உணர்வு உள்ளவைரை, கருணாநிதியின் தமிழ் குறித்தும், அவரது தொண்டுகள் குறித்தும் யாருக்கும் மறதிகள் வரப்போவதில்லை. அவரை என்னால் மறக்க முடியவில்லை. காலம் சிலபேரை மறக்கடித்துவிடும் என  சொல்லுவார்கள். காலமாகவே நிலைத்துவிட்ட கருணாநிதியை எப்படி மறக்க முடியும்?'' என்று உருக்குமாக தெரிவித்தார்.Trending Articles

Sponsored