அறநிலையத்துறைக்கு எதிராக நூதன முறையில் மனு கொடுத்த இந்து முன்னணியினர்!Sponsoredகாஞ்சிபுரம் மாவட்டம், சிங்கபெருமாள்கோயில் பகுதியில் ஸ்ரீபாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் நரசிம்ம பெருமாளை வழிபட்டனர். அப்போது ‘கோயில் சொத்தெல்லாம் கொள்ளை போகுது, கோயில் சிலையெல்லாம் திருடு போகுது, காரணமானவர்களுக்கு நீயே தண்டனை கொடு, போராட எங்களுக்கு சக்திகொடு’ என அவர்கள் கொண்டுவந்த மனுவை உண்டியலில் செலுத்தினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்து முன்னணி அமைப்பின் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அமைப்பாளர் சி.ஆர்.ராஜா, “இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய கோயில்களில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் திருடு போய் உள்ளன. பல ஆயிரம் கோடி மதிப்பிலான நிலங்களும் குளங்களும் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அரசாங்கமும் இந்து அறநிலையத்துறையும் கோயில் சொத்துக்களை பாதுகாக்க தவறிவிட்டது. பாதுகாக்க வந்த அதிகாரியையும் மதிக்கவில்லை. இதை கண்டித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்து இருக்கிறோம். எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் கடவுளிடமே மனுகொடுத்து இருக்கிறோம். வரும் 12ம் தேதியிலிருந்து 16ம் தேதிவரை தமிழகத்தில் உள்ள கோயில்களில் இந்து முன்னணியினர் இதே போன்று மனு கொடுக்கவுள்ளார்கள். இதைத் தொடர்ந்து 19ம் தேதி தமிழகத்தில் உள்ள பெரிய இந்து கோயில்களில் இந்து அறநிலையத்துறையை கண்டித்து கூட்டுபிரார்த்தனை நடைபெறும்” என்கிறார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored