திருவாரூர் ஆடிப்பூர தேர்த் திருவிழாSponsoredதிருவாரூர் தியாகராஜர் கோயில் ஆடிப்பூர தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


திருவாரூர் தியாகராஜர் கோயிலில் அமைந்திருக்கும் அம்பாள் கமலாம்பாளுக்கு வருடா வருடம் ஆடி மாதம் 19-ம் நாள் கொடியேற்றப்பட்டு,  10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் 8-ம் நாளான நேற்று, கமலாம்பாளுக்கு தேரோட்டம் நடைபெற்றது. எல்லையற்ற முழுமுதல் கருணைக்கடவுளாகிய சிவபெருமான், அம்மையப்பராக எழுந்தருளி எண்ணிலடங்கா உயிர்களுக்கு அருள் வழங்கும்பொருட்டு கோயில் கொண்டருளிய தலங்களில் சிறந்து விளங்கும் தியாகராஜர் வீற்றிருக்கும் திருவாரூர் கோயிலை சைவ சமயத்தின் தலைமை பீடமாகக் கருதுகின்றனர்.

Sponsored


இந்த கோயிலில் உள்ள கமலாம்பாள், அனைத்து ஆதிபராசக்திகளுக்கும் தலைமையாகவும் வீற்றுள்ளாள். இந்தக் கோயிலில் இடப்பாகத்தில் வடமேற்கைப் பார்த்தவாறு தவக்கோலத்திலும், தென்மேற்கு மூலையில் ஓர் அட்சர பீடமாகவும், மறுபுறம் சரஸ்வதி தேவி சந்நிதியுடனும் எழுந்தருளியுள்ளாள். கமலாம்பாளுக்கு ஆடி மாதம் இறுதியில் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழா, நேற்று மாலை 7 மணியளவில் தொடங்கியது. கோயிலில் இருந்து புறப்பட்டுவந்த கமலாம்பாள், தேரடி வீதிக்கு வந்து தேரில் ஏறினாள். பின்பு, பக்தர்களுடன் தேரடியிலிருந்து புறப்பட்டு, நான்கு வீதிகள் வழியாகச் சுற்றிவந்து தேரடி வந்துசேர்ந்தார்.

Sponsored
Trending Articles

Sponsored