தினகரன் ஆதரவாளரை வெட்டிக் கொலைசெய்த மர்மக்கும்பல் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு!Sponsoredஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகரச் செயலாளர் பாலமுருகன் என்பவரை இன்று அதிகாலை ஆறு பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று படுகொலைசெய்த சம்பவம், அச்சிறுபாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ளது அச்சிறுபாக்கம் பேரூராட்சி. இங்கு, அ.தி.மு.க-வில் 5-வது வார்டு பொறுப்பாளராக இருந்துவந்தவர் பாலமுருகன். அ.தி.மு.க-வில் இருந்து தினகரன் பிரிந்தபோது, தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவந்தார். இதைத் தொடர்ந்து, இவரை அச்சிறுபாக்கம் நகரச் செயலாளராக்கினார் தினகரன். அச்சிறுபாக்கம் பகுதியில் தகராறு ஏற்படும்போது, இவர் கட்டப் பஞ்சாயத்து செய்வது வழக்கம். அதுபோல, அவர் வசித்துவந்த காந்தி நகர் பகுதியில் கிராமத்தினருக்குக் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியின்போது, இவருக்கும் வேறுசிலருக்கும் தகராறு ஏற்பட்டது. தற்போது தங்கியிருக்கும் தேன்பாக்கம் பகுதியில் உள்ளவர்களிடமும் இவருக்கு முன்விரோதம் இருந்துவந்துள்ளது. அச்சிறுபாக்கம் பஜாரில் தேநீர்க் கடை ஒன்றை நடத்திவருகிறார் பாலமுருகன்.

Sponsored


Sponsored


இந்த நிலையில், வழக்கம் போல இன்று அதிகாலை சுமார் 5 மணிக்கு கடை திறப்பதற்காகப் பஜார் பகுதிக்கு வந்துள்ளார். அவரைப் பின்தொடர்ந்து வந்த ஆறுபேர் கொண்ட மர்மக் கும்பல், சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதில், சம்பவ இடத்திலேயே பாலமுருகன் இறந்துபோனார். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வரை கடை அடைப்பு செய்ய உள்ளதாக அச்சிறுபாக்கம் வணிகர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.Trending Articles

Sponsored